பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாணிபுர வணிகன் 5 ஆல்ை ஹாஸ்ய பாகம் என்னுடையதாக இருக்கட்டும். சங் தோஷத்திலும் சிரிப்பிலும் காலம் கழித்தே எனக்கு வயோ திகம் வரட்டும்; துக்கப்பட்டுக்கொண்டே துன்ப மனுபவிப் பதைவிட, மது ஷண்டு நான் மதர்த்து வாழ்வேனுக ஒரு மனிதன் தன்னுடலில் உயிரிருக்கும்பொழுதே சிலையில் செதுக்கப்பட்ட தன் பாட்டனரின் பிம்பத்தைப்போல் உட்கார்ந்திருப்பானேன்? கண் விழித்த வண்ணம் உறங்கு வானேன் : சுடுகாடுத்த முகத்துடன் சும்மா இருந்து சோகையை வரவழைப்பானேன் அந்தநாதரே, நான் உமக் கொன்று சொல்லுகிறேன். உம்மீதுள்ள பிரீதியால் இதைச் சொல்லுகின்றேன். இவ் வுலகத்தில் சிலர் இருக்கி மூர்கள், அவர்கள் பாசி படர்ந்த அசை வற்றதடாகங்களேப் போல் தங்கள் முகத்தை வைத்துக்கொண்டு, ஆழ்ந்த அறி வும் அளவற்ற ஞானமும் அதிக புத்தி கூர்மையுமுடையவ ரென்று மண்ணுலகத்தோர் மதித்திட விரும்பி வேண்டு மென்று மெளனம் சாதிக்கின்றனர். அவர்களேப் பார்த்தால்: 'நான்முற்று முணர்ந்த மெளனி, நான் வாயைத் திறந்தால் நாயும் குலேக்க லாகாது ' என்று அவதுபோலிருக்கும். அநந்தகாதரே, இம்மாதிரி மனிதரை நான் நன்ரு யறிவேன். பேசா திருப்பதிஞலேயே அவர்கள் பேரறிவாளரென மதிக் கப்படுகிரு.ர்கள். வாயைத் திறந்தால் அவர்கள் புல்லறி வாளரெனப் பூவுல கெங்கும் பிரசித்தமாகும். இதைப்பற்றி இன்னும் கூறுவேன் உம்மிடம் வேருெரு சமயம், நீர் இப் பொழுது இம்மாதிரியாய்ச் சோகை பிடித்தவன் போ லிருந்து சுத்த முடர்பெற விரும்பும் பட்டப் பெயரைப் பெற முயல வேண்டாம்.-லீலாதரரே, வாரும் நாம் போவோம்.நீர் சுகமாய் இரும் அதுவரையில் ; மத்தியான போஜனம் கொண்டபின், மற்றப் போதனையையும் கூறி முடிக்கின் றேன். சரி, ஆல்ை மத்தியான போஜன காலம்வரையில் உம்மை விட்டுப் பிரிந்திருக்கிருேம். கிரிஜாகாதர் கூறிய மெளன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/9&oldid=900285" இலிருந்து மீள்விக்கப்பட்டது