பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையில் தாமரைப் பூ வனங்கள் காட்டும் புதுவனப்பில்-தெய்வம் கோலங்கள் போடுதம்மா-தெய்வக் கோயில் இத் தேகமம்மா! ... துரங்கும் சமயத்திலே உயிருக்கு தாலாட்டு பாடுதம்மா -நாம் ஏங்கும் பொழுதினிலே வந்து மன ஏக்கம் தவிர்க்கு தம்மா... மலையுச்சி வானத்திலும்-ஏழு மாகடல் ஆழத்திலும் மானிடன் உள்ளத்திலும்-தெய்வம் மாயங்கள் செய்யுதம்மா! எங்கும் நிறைந்த பொருள்-அந்த ஏகக் கடவுளை -நாம் பங்கு செய நினைத்தோம்-பாரகத்தைப் போர்க்களம் ஆக்கி விட்டோம்! இயற்கை எழில் அதுதான்-ஒரு பெரும் எல்லையில்லாத தெய்வம்-அதை செயற்கைச் சிலைகளிலே-காணபெரும் சிந்தனை வேண்டுமம்மா!