பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானரதம் தனிலேறி ஒட்டி விட்டால் நமது மனம் கலைமதியை ஒடமாக்கும்! பச்சை மயில் முருகன் இசைப் பாட்டிலந்த பாரதியை அழகனே தழுவிக் கொள்வான்! பாரதப் போர் முடித்திட்ட வீரக் கண்ணன் பாரதியின் வீட்டிலே வேலைக்காரன்! பாப்பாவின் பாட்டினிமை கேட்டு விட்டால் பெற்றறியா மலடிகளும் அன்னையாவார்! அடிமையில்லை, அடிமையில்லை அடிமையில்லை ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றன்றே கூவி எமை அழைத்து ஞானக் கதிரொளியால் சுவைக்கடலைக் கருத்திற் காய்ச்சி கவியமுதம் மலைமலையாய்ச் சமைத்த தேவன். கவிக்கோமான் பாரதியின் நாமம் வாழ்க. புவில்ொம்.அவன் புகழை