பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான் கவிதைச் செல்வத்தை உயிரின்பத்தை வறுமை எனும் நெருப்பாலே வாட்டிவிட்டோம். சூடிட்ட கனல் பட்டும் சோர்வுக் கஞ்சான் சுடச் சுடவே சுடர்கின்ற சொக்கத் தங்கம். சிறப்பது போல் சிந்தனையில் செம்மை சேர்த்து அம்மையருள் பாரதியை அல்லால் மற்று யாதொன்றும் எண்ணுமல் அன்னைக்கென்றே மாதவத்தைச் செய்துவிட்டான் மறையின் மன்னன்! மொழியிலே உயிரையேற்றி, உயிரிலே உணர்ச்சியேற்றி உணர்ச்சியில் தேசாவேசத் தத்துவங்காட்டி அந்தத் தளபதி கவிதை செய்தான் தமிழுக்கு உயிரை ஈந்தான் தரணிக்குப் புதிய வேதம் தமிழுக்கும் புதிய கீதம்! 47