பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போருக்கு வீரத்தின் விதிவகுத்த தளபதி எம் தமிழ்க்கவியின் நாமம் வாழ்க. பாரதியின் பரம்பரைகாள்! புலவர்காள்! புரவலர்கrள்! புறப்படையைச் சாடி எழும், புயவலிமை வேங்கையர்காள்! பயமின்றி முழங்குங்கள்! பாரத மா நாடென்று! சிரந்துக்கி முழக்குங்கள், சுதந்திர மா சக்தியென! தந்திரியே யாலுைம் மந்திரியே யானுலும் தைரியமாய்ச் சொல்லுங்கள்! தேசபக்தி தேவையென! கொத்தி நமைத் தின்னுகிற கொலை கருப்பு வணிகருக்கும் சத்தியமாய் நாட்டன்பு தேவையெனக் கூறுங்கள்! 48