பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நாள் அமரரானுர் இன்று நாம் அனுபவிக்கும் இணையிலா உரிமைதந்தார், இன்பநல்வாழ்வு தந்தார்! சொந்தமாய் ஆக்கிவைத்தார் சமரிலே துடித்து மாண்டார், சோதரர் வீரவாழ்வைச் சிந்தையால் வணங்குகின்ருேம்! துரக்கிடும் சிறையே எங்கள் திருமண மேடை என்ருர் திருநாடு வாழ்கவென்முர் தொங்கினர் பினமாய் ஆங்கே! தாக்கினும் தளரா விரன் தாய் மணிக்கொடி எடுத்த தமிழ் மகன் தலையை, ஒங்கித் தடியினுற் பிளந்து கொன்ருர்! பச்சிளங் குருத்தைக் கிள்ளல் பாவமென் றெண்ணும் நாட்டில் பச்சிளம் பாலர் தம்மை பெற்ற தாய் மடியின்மீதே சாக்கொடுவாளால் விசித் தள்ளிய நீலன் போன்ற சண்டாளர் செயலை அன்று சாடிய வீரர் வாழ்க! 8 5