பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரமெலாம் பொன்செய்த நவயுகத்துச் சிற்பி எங்கோ தூரத்தே ஒடிவிட்டான் துயர் அணுகாத் துாரமடா! பூரணமா ஞானியரும் பார்த்தறியாத் துாரமடா! பாரெல்லா முயன்ருலும் போய்ச் சேராத் தூரமடா! விரரெல்லாம் அடிபணியும் வித்தகனை நம்தாயை, மாருட்ட மதவெறியன் மார்பினிலே சுட்டுவிட்டான்! போராட்ட மில்லாத பெருவெளியில் அவர்போக நீரோட்ட மில்லாமல் நிலம்வெடித்துச் சாயுதடா! போச்சுதடா தெம்பிழந்துப் புகையுதடா பூவுலகம் மூச்சிருந்தும் பிணமாகும் மாயநிலை வந்ததடா கூச்சமிலாக் கொடுமகனின் குண்டுபட்ட தாய்நெஞ்சம் மாட்சியொடு பார்க்குதடா "மகனேநீ எனச்சுட்ட உன்கைகள் நோகுமடா உட்காரு களைப்பாறு உன்கைநோய் திரும்வரை - நான்மருந்து போடும்வரை 68