பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலர் கூற்று கருங்குவளை விழிஉமிழும் கணப்பினுலே கருவாழைக் காதலன் கரையவேண்டும் இருவருமே இதயத்தை இழப்பதாலே இறுக்குமொரு கயிருக இணையவேண்டும் பெருக்கான பேரின்பம் மோதலாலே பொறுக்காத புதுஊடல் புகையவேண்டும் பருக்காதல் பிஞ்சிலே பழுத்ததாலே பசிக்காத போதிலும் புசிக்கவேண்டும் முறுக்கான இரகசியம் முறிந்ததாலே முழுக்கள்ள ராயவர் முழிக்கவேண்டும் சருக்கி விளையாடுகையில் சாயுங்காலம் சரக்கொன்னைப் பூங்குயில் பேசவேண்டும் வரப்புயரும் வயல்காடு வனத்திலெல்லாம் வளருமாம் இவர்மூடு மந்திரங்கள் உரப்புள்ள உடலின்ப விருப்பதாலே இறப்புலகம் அறியாத இளம்ைவேண்டும் 97+48 =145.