பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் (திரு. கு. ராஜவேலு, M.A.) மண்ணகத் தாயின் வளத்தை வாளுேங்கிய மரங்களில் காணலாம். பச்சைப் பசேலென்று பரந்து கிடக்கும் பசும் புல்லிலும் அதன் மாட்சியைப் பார்க்கலாம். ஊர்வாழ உலகம் வாழக் கவிதை பாடும் உயர்ந்த உள்ளத்தை, பாடிய கவிதையில் உணரலாம். அக்கவிதையின் கனிச்சுவையில் மனிதகுலத்தின் இன்பதுன்பங்களேத் தெள்ளத்தெளியலாம். வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியின் ஒட்டம்போன்ற தெள்ளிய நடை. அதன் இருமருங்கும் விரிந்து நிற்கும் காவினம்போல் கவின்பெற்ற கருத்துக்கள்! வானில் வரும் தண்மதியும், எண்ணிலா விண்மீன்களும், இடையிடையே எழில் வீசிப் பறந்து செல்லும் வண்ண முகில்களும், சகோதரர் எஸ். டி. சுந்தரம் அவர்களின் கவிதையிலே ஒளி வீசி நிற்பதைப் பார்க்கலாம். நாட்டின் தாழ்நிலைகண்டு அந்நாளில் தணலாய் எரிந்த வர் அவர். கங்கையாய்ப் பொங்கியவர் அவர். அதன் பயகுய் வெள்ளேயனின் அனேயாம் சிறையிலே அடைபட்டுக் கிடந் தவர். அந்தத் தேசபக்திக் கனல் கொந்தளிக்கின்ற உள்ளத் திலே எத்தனையோ அனற்பொறிகள் சிந்திப்பறந்தன. எத்த னேயோ தளிர்கள் இளவேனிற் காலத்தில் தளிர்ப்ப்தைப் போல் தளிர்த்தன, அரும்புகள் முகிழ்த்தன, மலர்கள் மலர்ந்தன. அவற்றிலே சிலவற்றை நமக்குக் கொய்து, 'ஆண்டவன் நூலகத்தார்’ கொடுத்திருக்கின்ருர்கள். இ.