பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிதக் கடல் அடைக்கக் கவியின் கதை முடிய வானத்திலோ அன்றி வறுமைநோய் எல்லையிலோ, எங்கே போய் அடக்கியதோ ஏக்கத்தின் பெருமூச்சு...? இறுதியிலே எமன்பாடும் இக்கவிதை கேட்டதல்ை இதயம் வெடித்ததனால் இவ்வுண்மை சொல்லுகிறேன் "சீச்சி கவி எழுதி சிறுமையிலே சாகாதே யாருக்கு இனி வேண்டும் ஏழை உயிர் இன்கவிதை பாடுவதும் பிழைப்பாமோ பிழையன்ருே இவ்வுலகில் பிழைக்கும் வழி எத்தனையோ பொய் வழிகள் ஆயிரமாம் கள்ளச் சாராயத்தைக் காய்ச்சுகிற குள்ளமகன் கோடிபணம் சேர்க்கின்ருன் குணவள்ளல் ஆகின்ருன்! கூடிவிட்ட திரவியத்தால் கொடிகட்டிப் பாராளும் கோமானும் தானகி குறும்புபல செய்கின்ருன் உயிரெழுத்து மெய்யெழுத்து ஒரெழுத்து மறியாமல் 155