பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினுேபா அதிகாரம் அகங்கார ஆதிக்கத்தை அதிமாயை என்கின்ற அன்பின் மேலோன் விதி.என்று ஏய்க்கின்ற வேற்றுமைப் பேய் விதமான ஜாதிமதம் வென்றவிரன் சதிசெய்யும் அரசியலாம் சகதிவிட்டுச் சேவையெனும் சாரத்தைக்கண்ட மெய்யோன் கதியற்ற ஏழைக்குக் கருணை வள்ளல் காலமழை கொண்டுவரும் காற்றைப்போன்ருேன் காந்திவழி விட்டுநெறி கெட்டுப்போளுர் கல்நெஞ்ச வஞ்சமெலாம். கருகிப்போக சாந்தமுடன் சத்தியமாம் துணையைநம்பி சஞ்சலமாய் ஏழைமகன் ஜீவன் வெம்பி, ஏந்தியகை கும்பிட்டுப் பிச்சை கேட்கும் இந்தியனின் நிலைகண்டு இதயம்விம்மி காய்ந்திட்ட மனித மனக்காட்டையின்று காருண்ய ஊற்ருக்கும் கங்கைபோல்வான் 159