பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயிலிருக்குது குளமிருக்குது கோடிகோடி கலையிருக்குது காவேரிகங்கை ஒடுது-கருணை கொண்டு கஞ்சி ஊத்தநாதியில்லையே காணக்காண கண்பறிக்குது கள்ள நோட்டுக் கனமிருக்குது காந்திமகான் பிறந்தநாட்டிலே ஒ வீரர்களே! கருப்பு மார்க்கெட் கழுதைமேயுது சீறும்பசி சிவந்த நெருப்புங்கோ-அது ஜெகத்தைகூட முழுங்க பாக்குங்க சீக்கிரமா முடிவு தேடுங்க இல்லாப்போனு, சிரமம் ரொம்ப மீறிப்போகுங்க.