பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருக்கி எமைப் பாகாக்கி உலகத்தை வசமாக்கும் உருவற்ற வானெலியின் உடலாகப் போயினையோ! இங்கிதமாய்ப் பழகியெமை இன்னுறவு கொண்டவனே சங்கீதத் தேன் கடலின் சுவை ஞான முத்தொளியே மங்காத ரத்தினத்தின் மணிராஜ முடி சூடும் சிங்கார வேலன் உனை சிறைமீட்டுக் கொண்டானே! சின்னஞ்சிறு கிளியின் செங்கனி வாய்ப்பாட்டமுதில் உன்னழகுக் கீதத்தில் உளங்குளிரும் விந்தையதைத் தென்மலையின் சாரலிலே கேட்ட தமிழ்ப் பாரதியும் தன் ஞானரதந் தன்னில் தானழைத்துப் போயினனே! கோயிலெல்லாம் குளிர்வித்த கீதமழை காய்ந்ததுவோ கோயில் பட்டியிலே கோயில் கொண்டு விட்டதுவோ! வாயில் வருமுன்பே வரவேற்பாய் அவ்வுலக 66