பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயிலிலும் நண்பர்களை வரவேற்கப் போயினையோ! ! நாற்பத்து இரண்டாண்டில் நாதமுடிவாகி விட்டாய் ஏற்பதுவோ இச்சோகம் என்று கொலோ மாறுவது! தோற்பதுவோ துரயஇசை துவக்கத்தே முடிந்தகதை போற்பறந்து போய்விட்டாய் புகழ் கசந்து போனதுவோ! வேதத்தின் வித்தென்பார் விண்ணுத வெளியென்பார் போதப்பொருள் விரியும் புத்தொளியே கீதமென்பார்! நூதனமாய் நாடெங்கும் நல்லமுதாய்ப் பாய்ந்திட்ட நாதக்குளிர் நதியின் நல்லூற்று வற்றியதோ? ஆதியந்த மில்லாத அருணுசலக் கலையே பூதவுடல் பழசென்று புதியவுடல் வேண்டினையோ! நாதவுடல் கொண்டு நெடுவானக் காற்றெல்லாம் ஓத இசைமயமாய் ஒடோடிப் போயினையோ! 167