பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தையே தொட்டுப் பார்த்தால் ஆங்கு ஆயிரமாயிரம் எண்ண ஒளிகள் தெரியும்! வான கீதங்கள் கேட்கும் ! வெற்றி முரசு கள் முழங்கும் விர காவியங்கள் ஒவியங்கனாகத் திகழும் ! ஆசிய ஜோதியான பண்டித நேருவின் பெருமுயற்சி யால் இந்த உலகமே போற்றும் நிலையில் பரவி நிற்கும் பாரதப் பண்பாடு மனித நாகரிகத்தின் தெய்வ நாதம். அது வற்ருத வானமூதம்’. சாந்தியின் சமரச கீதம். அதை வடித்தெடுக்க இச்சிறு உயிரால் முடியுமா ? ஏதோ எண்ணச் சிறையிற்கிடந்த இந்தச் சிற்றறு வெளிவருகிறது. “ வானமுதம்' என்ற இந்நூலே சேவையின் வீர உருவ மாகத் திகழும் தலைவர் திரு. காமராஜ் அவர்களின் பிறந்த காள் பரிசாக சமர்ப்பிக்கிருேம். அனிைந்துரை, முன்னுரை அளித்துதவிய அறிஞர்கள் திருவாளர்கள் ரா. ரீ. தேசிகன், மீ. ப. சோமசுந்தரம், எஸ். நல்லபெருமாள், கு. ராஜவேலு, கொத்தமங்கலம் சுப்பு, கவி ஆறுமுகளுர், கவிஞர் திருலோக சீதாராம் ஆகியவர் கட்கும் இந்நூலை வெளியிடும் ஆண்டவன் நூலகத்தாருக் கும், அச்சிட்டு உதவிய சுதேசமித்ரன் அச்சகத்தாருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள். ' கலே பெரிது-காலமே சிறிது தங்கள் பொன்ஞன பொழுதில் இரண்டு நாழிகை நேரத்தில் இப்புத்தகத்தைப் பார்த்து, உங்கள் கருத்துக்களே அடியேனுக்கு எழுதினுல் அதுவே நீங்கள் இந்த எளிய தொண்டுக்கு அளிக்கும் பரிசாக எண்ணி மகிழ்வேன். உற்சாகம் கொடுங்கள். உங்களுக்கு உண்மைகளைத் தகு கிருேம். சக்தி கொடுங்கள். சத்தியத்தை வழங்குகிருேம். மகாகவி மரபின்வழி தொண்டாற்றுகிருேம்: வாழ்க பாரதம்! வாழ்க நல்லுலகம்!! அன்புள்ள, எல். டி. சுந்தரம். 12