பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னை பூவிரியும் புதுமணமும் பெருமழையும் அமுதுாறும் வானதியும் வைகையாறும் பாவிரியும் கதிர்மதியும் பழமலையும் பசியவயல் புதுவுலகும் புகழுலாவும் காவிரியும் காட்சிகளும் கனகமணி கோபுரமும் கண்டுள்ளம் கவிதையாட மாவிரியும் மண்மீது மைந்தன் எனப்பெற்று மகன் என் நழைத்த தாயே! மண்ணப்பளுமென்னைப் பொன்னப்பனுக்கியே மாசிலா வாழ்வளித்தாய் வண்ணவான்திரையிலே வளர்பிறைஒளிகாட்டி வயிருரப் பால்.ஊட்டிய்ை உண்ணுமல் ஓயாமல் ஓராண்டு தூங்காமல் என்னையும் ஆளாக்கிய்ை அன்னையே உன்னுயிர் அன்பிலே திவலைநான் ஆருயிர்ச் சோதி நீயே!