பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடு எங்கள்நாடு நல்லநாடு எல்லைகோடு இமயமேடு திங்கள்.கதிர் திகழுநாடு தெய்வமெங்கள் குமரிவீடு மங்களக் கல்ைகள்நாடு மறைவளங் கொழித்தகாடு பங்கயக்குளங்களோடு பாடுமின்ப ஜீவநாடு! பொங்குகின்ற புதியகொள்கை போற்றுகின்ற புனிதநாடு துங்கமான தொழில்கள்கோடி தொடருகின்ற தீரநாடு சிங்கமான மறவரோடு சீர்மிகுத்த ஏர்கலப்பை தங்கமான தாயின்நாடு தருமஜோதி என்றுபாடு!