இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மனிதன் துரங்கும் குழந்தை விழிஇமையில் தோவும் சாந்தப் பேரழகே! ஏங்கும் மனிதன் பார்வையிலே ஏளுே உன்னைக் காண்கிலனே! தேங்கும் ஏரியின் தெண்ணீரில் தேம்பும் மனிதன் உணராமல் தெரியாதெங்கோ தேடுகிருன்! ஆற்றங்கரையின் நிழலினிலே ஆயன் ஊதும் குழலினிலே ஆஊற்றும் அமுத மழையெல்லாம் ஒடும் மனிதா உனக்கன்ருே? காற்றின் அலையில் கழனிகளில் கார்முகில் துரவும் சாரலிலும் பாட்டின் கதியில் பரவெளியில் பரவும் அழகைப் பாராயோ! xii.