பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோர்ந்தஉயிரில் சுற்றிஎழும் சோகம்திர்க்க மாட்டாயா? ஒய்ந்த மனிதா ஒருநாளும் உண்மைகாண மாட்டாயா! பேயாயலையும் மானிடமே பேசிச்சாகும் யந்திரமே! தாயாம் அன்பின் சாந்தியவள் தருமத்தின் ஒளி காணுயோ! உன்னுள் சத்தியம் இல்லாமல் உலகின் சமரசம் பேசுகிருய் என்னே போலிவாழ்க்கையடா ஏனே இப்படி ஏங்குகிருய்! பேசாமிருகம் நல்லதடா - பசித்தால் ஏதோ கொல்லுதடா! பேசும் மனிதன் நல்லவனு பார்வையினலே கொல்லுகிருன்! பாவம் என்ற சொல்லுக்கே பகுத்தறிவில்பொருள் இல்லையடா? நாவன்மை பொய்வஞ்சகமே நண்பா நம்மை ஆளுதடா! xiii.