பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவ மேதைக்கு மெத்த உதவியே தத்தளித்த ஏழை செத்துவிட்டான்! பக்தியின்போதகர் புத்தியில்வல்லவர் பத்துப் பங்கள்ாவை வாங்கிவிட்டார்! இத்தவ நாட்டினில் இன்னும் இருக்குது ஈசன் திருப்பெயர் பூசையெல்லாம்: கத்தைப் பணநோட்டைக் கையிலேநீட்டினுல் கடையிலே ஞானத்தை வாங்கிடலாம்! இன்ப ஞானக்கடை வைத்திடலாம் எத்தகை வியாபாரம் யாரிங்குசெய்யவும் ஏராளமாயுண்டு இன்பசுதந்திரம்! எத்தனை எத்தனை ஞானபரம்பரை இத்தரை வாழ்வினில் என்ன கண்டோம்!

பக்தி மறந்தவர் பேசிச்சிறந்தவர்

பாசாங்குக்காரரை வாழவைத்தோம்! புத்தரும் வள்ளுவர் சித்தர் ஆகுமுதல் சத்தியகாந்தியும் வந்துதித்தார் அத்தனை பேரையும் தின்று ஏப்பம்விட்டுத் தத்துவ சாத்திரம் வாழுதய்யா! xvi.