பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. 12. சங்கீதம் பாடுகையில் சந்தேகம் வரலாமோ? சங்கோசம் ஏனடியோ சதி ராடும் இளவரசி! மங்கை யெழில் மேனியிலே மின்னுமணி மேகலை போல் தங்க மலர்த் தான சையும் தாளத்தில் பாடுக நீ! தாளத்தின் லய வீச்சில் தாவுகிற வேகத்தில் காலத்துப் பரிமாணக் கணக் கெல்லாம் ஏனடியோ? கோலத்துக் கோதை யெழில் - குலவுகிற கொஞ்சு கலை ஜாலத்துக் கண்வீசும் ஜாடை கண்டு பாடாயோ? xxii