பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. 20. சுவை மட்டும் போதாது சுக மட்டும் போதாது தவங் கெட்டுப் போகாமல் தரங் கெட்டுத் தாழாமல் செவி கெட்டச் சீமான்கள் சூழ்ச்சிகளைச் சுட்டெரிக்கும் கவி கெளட்டிக் கலை யுலகம் களை கட்டப் பாடாயோ? களைத் திட்ட கவலைக்குக் காலை யிளங் காற்றே நீ திளைக்கின்ற இன்பத்தில் திங் கவிதை தாராயோ? வளைக்கும் சொல் இல்லாமல் வானமுதத் தேனுண்டு களிக்கின்ற வெண் குயிலே கருத் துருகப் பாடாயோ? xxvi