பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் எங்கே? இன்பம் எங்கே இன்பம் எங்கே-என ஏங்காதே துன்பத்திலே அன்பில் இன்பம் உயர் பண்பில் இன்பம் ஆசை தியாகத்திலேதான் அழியாத இன்பம் காண்பாய் ... (இன்பம்) மாசறியாத மங்கையைப் போல் பாசக்குயில் கூவும் சோலையிலேநேசம் விளங்கிடும் நெஞ்சினிலேஎழும் ஒசையெலாம் அன்பின் இன்பம் இன்பம் (இன்பம்) மாமழையும் மாருதமும் - மாமலைச்சாரலில் சேர்வதுபோல் ஆணும் பெண்ணும் சேர்ந்திசைக்கும் ஆனந்த மோகன கீதத்திலே தோன்றி எழும் ஜீவஸ்வரம்.அதில் துள்ளிஎழும் அன்பின் ஆத்மலயம்(இன்பம்) வேய்ங்குழலின் விண்ணிசையில் வீணைதரும் சுகநாதந் தன்னில் பாய்ந்துவரும் பேரின்ப வெள்ளம் தோய்ந்திடும் தேன்சுவை இன்பம் இன்பம் (இன்பம்) xxxix