பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீவசங்கீதம் சரசமோகன சங்கீதாமிர்த சாரலில் மாங்குயில் கூவுது பார் (சரச) சந்தையிலேவிற்கும் சரக்கல்லகீதம் சிந்தையிலே எழும் ஜீவ லயம் சுந்தரவான் கவி சோலையிலே எழும் சுவைத் தேன்சுகமே சங்கீதம். (சரச) மந்தை மேகங்கள் கூடி முழங்கும் விந்தையாய் மழை வாரி வழங்கும் அந்தமாமழையால்வரும் ஆருயிர் சந்தமே உயர் ஜீவசங்கீதம் (சரச)