பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்கிளி ! அழகோடையில் நீந்தும்-இள அன்னம் உண்தெண்ணம் எழில் தோய்ந்திடும் கலைமாமயில் வண்ணம் உடைவண்ணம். சுழல் மேவிடும் பார்வை-அதில் எழும் போதையின் கூர்மை-சுவை பழம் ஊறியதேனே-சுடர் தழல் வாரிடும்வானே? மழை சூழ்ந்திடும் மாலை-குளிர் தழை தாழ்ந்திடும் சோலை-அதில் விழை வாய்க்கனி தேடி-தமிழ் மொழி பேசிடும் கிளியே!