பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லேயற்ற வல்லமை! எல்லையற்ற வல்லமை எங்குமுள்ள வல்லமை! அல்லலற்ற அச்சமற்ற ஆண்மைமிக்க வல்லமை! கள்ளர் வந்து கொள்ளைகொள்ளும் கணகமல்ல வல்லமை புல்லர் வந்து கவருகின்ற பதவியல்ல வல்லமை பள்ளர் கூடி பயிரறுக்கும் பூமியல்ல வல்லமை வில்லர்வந்து வெற்றிகொள்ளும் வீரமல்ல வல்லமை! எங்குவன்மை என்று தேடும் ஏக்கமல்ல வல்லமை உள்ளிருக்கும் வல்லமை! உண்மையான வல்லமை! இங்கு வந்தன் இதயமீது இருக்குதந்த வல்லமை! அங்கிருக்கும் ஆன்மவன்மை அறியும் அறிவு வல்லமை மங்கிடாத மாசில்லாத மாதவத்தின் வல்லமை! எங்கு முள்ள வல்லமை எல்லையற்ற வல்லமை! (எல்லை) Lxvii