இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விஞ்ஞானி; வானமுதம் காலமெனும் சிற்பி செய்யும் கவிதைத் தாய்க் கோயிலடா கோலமின்னும் இயற்கையருள் கோடிமலர்த் தோட்டமடா! ஒலமிடும் மானிடனே உன்னறிவின் ஊட்டமடா சோலையெழும் ஞானவெளி சங்கீதம் கேட்டிடடா! காலத்தை வீணுக்கும் கவியரசே உன் கவிதை ஜாலத்தால் இவ்வுலகம் தூங்குவது இனியில்லை! ஆளத்தான் வந்தோம் எம் அறிவுள்ள விஞ்ஞான வீரத்தின் வல்லமையால் உலகெங்கள் உடைமையடா!