பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிமையின் லீலையடா! காலைப்பொன்சூரியனும் கார்முகிலின் சந்திரனும் காலமெனும் வண்டியிலே கடையாணி சக்கரமாம். கடவுள்அருள் கருணையினல் காலமழை பெய்யுதடா! விஞ்ஞானி:- காலத்தைக் கூறு செயும் கலையெங்கள் விஞ்ஞானம் கலைமதியும், கதிரவனும் கணக்கில்லா தாரகையும் கூரிய எம் அறிவொளியில் கோளத்துக் கூறுகளாம்! கடவுளென்று நீ கூறும் கற்பனைக்கு ஏது இடம்? கவிஞன்- தரைதன்னை மறந்துவிட்ட தனிமரம்போல் ஆடுகிருய்! தாய் முகமே காணுத தனிமகவாய்ப் பேசுகிருய்? உலகதிரப் பேசுகிருய் உன்னலே என்னுகும்? ஒன்றைமற்முென்ருய் 3.