பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துகள் துகளாகி வ்ேகும்! கருத்தினைப் போல வேகும்! அனல் உமிழ் திப்பிழம்பு அணிஅணியாகத் தாவும்! கனல் கக்கும் வானம் பாயும் கதிரவன் தன்னைச் சூழும் மணல் எல்லாம் பொன் குழம்பாய் மடைதிறந் தோடிப் பாயும்! புனல் இலாப் புவிவெடித்துப் புரட்சிகள் செய்யுதாங்கே! காட்டினில் குன்று சூழும் கழனியில், சோலைதன்னில், வீட்டினில் உள்ள தோட்டம் வாசனைச் சோலை தன்னில் சூட்டுத் தி சூழ்ந்ததாலே சுற்றிய நெருப்புக் கால்கள் திட்டிய கூர்வாள் போன்று திக்கெட்டும் பாய்ந்து ஒடும்! வாட்டுது வாட்டுதந்தோ வீண்பகை அழிவு தன்னல் கேட்டினைத் தேடிக் கொண்டான் கெடுகின்ருன் மனிதனின்ள்ை! மூட்டிய போர் நெருப்பு மூண்டெழுந் தாடிப்பாடி மாட்டுது, மனிதக் குப்பை மரணத்தின் சிறிய தினி! 10