பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணே உருகையிலே வேகும் நெய்யேபோல் மண்ணும் பஞ்சாகும் மாயப் புகை சூழும்! மங்கள நதி வயல்கள் மாறின சுடு காடாய்! எங்கும் பிணத் தோற்றம் எரிமலையின் சீற்றம்! வங்கக் கடல் ஆழம் வற்றிய முடை நாற்றம்! செங்கதிரின் ஏற்றம் சித்திரை இடுகாட்டில்! கல் நொறுங்கிக் குழம்பாகிக் காய்ந்தோடும் எண்ணெயெனச் சொல்லறுத்துச் சாடிவரும் சவநாற்றச் சுழற் காட்டில் அள்ளியதோர் அனல் வெளியில் அனைத்துயிரும் திய்ந்ததுவால், துள்ளிடவும் துயர் உறவும் இல்லையொரு உயிராங்கே! எலும்புக் கரிமலைகள் எண்ணித் தொலையாது! மதமும், ஜாதியிலை மயக்கும் நிறமில்லை! 12