பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணரசன் வந்து:ன் வெறிகொண்ட்ரன் மன்: தண் மேகக் கரத்தாலே தாங்கித் தன் வெண்கதிரால் திண்டிவிட்டான், மண்ணரசி கொண்டதொரு பெருமூச்சில் மொண்டு கொண்டாள் வானமுதம்! இவ்வாறு வானமுதமென மழை பெய்து குளிர்ந்த பிரதேசத்தில், விமானத்தை இறக்கினர். சில விஞ்ஞானிகள்! மாயமாந்தரின் அழிவுக்கரம் படாத மாமலைச் சாரல் அது! மாலை மழையிலே சோலை வனங்கள் சொக்கியிருக்கும் பரவெளி அது! இன்ப மும் குளிர்ச்சியும் சேர்ந்து துலங்கும் அமரபூமி அது! அமைதியின் அமுதக்கடல் அது! புனிதத்தின் உறை விடம் அந்த இன்பப் பெருவெளி! யுத்தப் பேயின் பாவமூச்சுப்படாத புண்ணிய பூமி அது. அதுதான் இமயமலையின் இன்பச் சாரல்! பொதியமலைச் சாரல் போன்ற புனித நல்லிடம்! வெறியர்கள் இதுவரை கண்டறியாத வானமுதப் பொற்கோயில். யுத்த நாசத்துக்குக் காரணமாயிருந்த அந்த விஞ் ஞானிகளின் உள்ளம் சிலிர்க்கிறது! உடல் புத்துயிர் பெறுகிறது. தூரத்திலிருந்து ஒரு இன்ப கீதம் காற் றிலே மிதந்து வந்து அவர்கள் இதயத்திலே பாய் கிறது! பாட்டின் அலைகள் புறப்பட்ட திசை நோக்கிச் செல்லுகின்றனர்! பாடல் புறப்பட்ட இடம் பாவி H5