பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களின் கண்களுக்குத் தெரிகிறது. பாடும் உருவமும் கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது. சாந்தியின் பூரணத்திலே, பொலிவுற்று விளங்கும் மனித சரீரம் நூற்றிருபது ஆண்டு நிறைந்த பழுத்த மேனி அவருடைய மதுரமான இ த ழ் க ளி ல் இருந்து இன்பவான் கவிதை இயங்குகிறது! கேட்ட னர் கொடுமை நாட்டார்! அழிவுக்கே தொண்டு செய்த அவர்களுக்கு இந்த அமரகீதம் ஆனந்த வெள் ளமாயிருத்தது! - அன்னையின் பொறுமையில் அமைவது சாந்தம். இன்னிசை காற்றில் எழுவது சாந்தம். மண்ணக வாழ்வின் மணமே சாந்தம். விண்ணில் தவழும் ஒளியே சாந்தம்... (அன்னை) தத்துவம் தாண்டிய தயையே சாந்தம் சித்தத் தெளிவிலே ஜொலிப்பது சாந்தம். நித்தியமான நினைப்பே சாந்தம்... (அன்னி (வைஷ்ணவ ஜனதோ பாடலின் மெட்டோே ஒட்டிப் பாடுக.) . 16