பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துயர் எனும் தொட்டிலிட்ட துரங்காத குழந்தை போல துடித்த கண் அழுததாங்கே, தொல்லையின் எல்லைக்கோட்டில்! புறப்பட்ட பனியின் காற்றுப் படகினில் நாதமென்னும் மணமகன் ஏறிக்கொண்டான் மணமகள் கீதம் என்பாள்! முதலிலே நாணிக்கொண்டாள், மெதுவாக நாதனேடு, மயங்கியே அமர்ந்தாள் அங்கு மதுர சங்கிதம் பொங்க! பரந்த அப் பா ட்டில் பிறந்தது ஒலியின் கூத்து? பொலிந்தது புதிய ஓசை புகுந்தது பார் மீதெங்கும். தவழ்ந்ததோர் தெய்வ சக்தி தடித்த அவ்விருளின் காட்டு வெளியெல்லாம் மெல்ல மெல்லப் புகுந்தது மறுகணத்தே... ஒருகோடி கோடை மின்னல் உடற்கூத்து செய்ததைப் போல் - நாதமாம் சக்தி வந்து . . . நானில மெங்கும் ஆடும்! 20°