பக்கம்:வானொலியிலே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வானொலியிலே

அதிகாரிகள் சொல்லுகின்ற விடைதான் இப்பேச்சின் தலைப்பு. இப்பொழுது விளங்கியிருக்கும், ' கல்வி நிலையங்களிற் சேர திறமையே முதல் தேவை” என்பதன் பொருள்.

" இதுதான் சரி ' என்று சென்ற ?-ந் தேதியன்று ஒரு பேச்சைக் கேட்டோம். என்போன்றவர்கள் அதைச் சரி என ஒப்ப முடியாது. ஒப்புவதானல், குறைந்த எண்ணிக்கையுடைய உயர்த்தப்பட்ட வகுப்பினர் மேலும் மேலும் முன்னேறுவதையும் அதிக எண்ணிக்கையுடைய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் முன்னேற வழியில்லாமற் போவதையும் ஆதரிக்க வேண்டும். ஆகவே, ”திறமையே முதல் தேவை” என்ற கொள்கையானது பெரிதும் தவறானதும், வருங்கால குடி ஆட்சிக்குச் சிறிதும் ஒவ்வாதது மாகும்.

" திறமை " என்பது எது திறமையை அளக்கும் அளவுகோல் எது ? யார் அளப்பது ? எப்படி அளப்பது ? முடிவு கூறுவது எவர்? கூறப்பட்ட முடிவுகளில் ஜாதிப் பற்று கலக்கவில்லை என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி ? என்ற கேள்விகளெல்லாம் திறமை என்றதும் கிளம்பு கின்றன. அதிக ”மார்க்குகள்” தான் திறமை என்பது என்றால், சலுகைக்காகவும், சிபார்சுக்காகவும், ஜாதிக் காகவும், பொருளுக்காகவும் மார்க்குகள் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் அடியோடு ஒழிந்த பிறகல்லவா மார்க்குகளைக் கொண்டு திறமையை அளக்க முடியும் ? இப்போது அளப்பது எப்படி ?

நேர்மையான ஆசிரியர்களிடம் படிப்புக்காக மார்க்குகள் வாங்கிய பையன்களைக்கூடத் திறமையுடையவர்கள் என என்னல் ஒப்ப முடியவில்லை. படிப்பிற்காக வாங்கிய மார்க்குகள் படிப்பிற்காகப் பயன்படலாம். அதைவிட்டு தொழிலின் திறமைக்கு அந்த மார்க்குகள் எவ்வாறு பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/11&oldid=486924" இலிருந்து மீள்விக்கப்பட்டது