பக்கம்:வானொலியிலே.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 வானொலியிலே

19 வயதுக்குள் கல்லூரிக்குப் படிக்க வருகிறவர்கள் தான் திறமையுடைய பிள்ளைகள் என்றால், பொய்யாக வயதைப் பதிவு செய்கின்றவர்கள் எல்லாம் திறமையுடை யவர்கள் என்றும், உண்மை வயதைப் பதிவு செய்கின்றவர் களெல்லாம் திறமையற்றவர்கள் என்றும் ஆகும். இந்த வயதுக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினால், பொய்யாக வயதைப் பதிவு செய்கிறவர்களும் பெருத்து வருகிறார்கள். அரசாங்கத்தினர் கடுமையான நடிவடிக்கை எடுத்தால் இது குறையும். இன்றேல் இக் கொடிய வழக்கத்தால் பிள்ளைகளையும் பொய்யிலும், ஏமாற்றத்திலும் பழக்கி, நாட்டிற்கும் கேடு செய்வதாக முடியும். இதனால் எல்லோரும் இவ்வாறுதான் வயதைப் பதிவு செய்கிறார்கள் எனச் சொல்லுவதாக நினைக்க வேண்டாம். இது அடியோடு இல்லையென எவரும் சொல்லிவிட முடியாது. என் பிள்ளைகளைப் பள்ளியிற் சேர்க்கும்பொழுது எனக்குக் கூட இவ்வாலோசனை கூறப்பட்டது என்றால் பிறரைப் பற்றிச் சொல்வானேன்? ஆகவே, வயதுக் குறைவுத் திறமை வழக்குக்கு வந்தால் நிற்காது.

திறமைதான் தேவை என்பதில் இன்னொரு தவறும் நடந்துவருகிறது. அதாவது சில வேலைகளுக்கு எஸ். எஸ். எல். ஸி படித்தவர்கள் போதும் என்றிருக்கும்பொழுது, அதற்குத் தகுதியுள்ள மாணவர்களும் விண்ணப்பித் திருக்கும் பொழுது அவர்களை எல்லாம் விலக்கிவிட்டு, பி. ஏ., எம். ஏ. படித்தவர்களை அவ்வேலைகளுக்கு நியமித்து விட்டு எங்களுக்குத் திறமையே முதல் தேவை, எனக் கூறுகிறார்கள். இது எவ்வாறு நியாயமாகும் ? குறைந்த படிப்புள்ளவர்கள் பார்க்கும் வேலைகளுக்கு அதிக படிப் புள்ளவர்கள் எதற்காக? அதைப்போலவே இஞ்சினிரிங் காலேஜில் சேர எப். ஏ. படிப்புப் போதும் என் றிருக்கும்பொழுது பி.ஏ., எம். ஏ. க்களை நியமித்துவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/13&oldid=487619" இலிருந்து மீள்விக்கப்பட்டது