பக்கம்:வானொலியிலே.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 -

வானொலியிலே

நாடாள வேண்டுமென்றும், பிற சமூகங்கள் அடங்கி வாழ வேண்டுமென்றும் சொல்லப்படுவது போலத் தோன்றும்.

உயர்ந்த ஜாதிப் போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் புளிய மிலார் அடி வாங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் சமூகத்திலும் சிலர் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயற்கையே. அதற்காக அந்தச் சமூகத்தினர் கல்லூரிப் படிப்பு இருந்தால்தான் அவ்வேலைகள் கிடைக்கும் என நினைத்து, சில பிள்ளைகளே எஸ். எஸ். எல். ஸி வரை படிக்க வைத்து கல்லூரியில் படிக்கத் தகுதியுடையவன் என்ற நற்சாட்சிப் பத்திரத்தோடு கல்லூரிக்கு அனுப்பி வைத்தாலும் அவனை அங்கு சேர்க்காமல், அதிக மார்க்கு வாங்கிய மக்களைச் சேர்த்துக் கொண்டிருந்தால் அந்தச் சமூகத்தின் கதி என்ன? அவர்களிற் சிலர் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாவது எப்படி ? அவர்கள் தங்கள் முதுகில் புளியமிலார் அடி வாங்காம லிருப்பது எப்போது "திறமைதான் முதல் தேவை” என்று கூறுகிறவர்கள் இவைகளே எண்ணிப் பார்த்தாவது கூற வேண்டாமா ?

வகுப்புப் பூசல்களும், ஜாதிப் பிரிவுகளும் உடனே ஒழியவேண்டும் என்ற கொள்கையுடைய அறிஞர் களைக்கூடத் திறமைதான் முதல் தேவை என்ற சொற்களானது திடுக்கிடச் செய்கிறது. முற்போக்கடைந்த மக்களோடு பிற்போக்கடைந்த மக்களும் சரி சமமாக எல்லாத் துறைகளிலும் வரும்வரையிலும் ஜாதிப் பிரிவுகள் அப்படி அப்படியே நிலைத்திருக்க வேண்டும் எனவும், அப்போது தான் குறிப்பாக அவர்களைக் கண்டு பிடித்து உயர்த்த முடியும் எனவும் நினைக்கும்படிச் செய்கிறது. இவ்வாறு நினைக்கும்படித் தூண்டுவது திறமையே முதல் தேவை என்ற சொற்கள்தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/17&oldid=490152" இலிருந்து மீள்விக்கப்பட்டது