பக்கம்:வானொலியிலே.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஜாதி முறை

| இதே பொருள் பற்றி வேறுபாடான தமது கருத் துக்களே இதற்கு முந்திய பேச்சில் மதுரை ராவ் சாகிப் என். நடேசய்யர் அவர்கள் தெரிவித்தார்கள்.)

தமிழ் நாட்டுப் பெருங்குடி மக்கள் அனைவர்க்கும் எனது வணக்கம். ஜாதி முறையைப் பற்றிப் பேசும் வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது. ஜாதி என்பது மக்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து, ஒரு பிரிவி லுள்ள ஒரு கூட்டத்தைப் பிறப்பின் பொருட்டு குறித்துக் கூறுகிற ஒரு சொல். ஜாதி என்ற இச்சொல் பண்டைத் தமிழ் நால்களில் இல்லை. இச் சொல் இல்லாததைக் கொண்டே ஜாதி முறையும் பழந்தமிழ் காட்டில் இல்லே என்று கன்கு விளங்குகிறது. குலம் என்ற ஒரு சொல் இடைக்காலத்திய தமிழ் நால்களில் காணப்படுகிறது. குலம் ஜாதியல்ல.

ஜாதி வேறு, குலம் வேறு. இதன் உண்மையை, ஜாதி குலம் பிறப் பிறப்பு என்ற சொற்ருடர் நன்கறிவிக்கும். ஜாதி பிறந்த கூட்டத்தைக் குறிக்கும். குலம் நடந்த ஒழுக் கத்தைக் குறிக்கும். குலம் என்ற சொல்லே ஒழுக்கம் என்ற பொருளிலேயே பல புலவர்கள் பல்வேறு நூல்களில் வழங்கியிருக்கிருர்கள். குல மகளிர் என்பது எந்த ஒரு ஜாதியையும் குறிக்காமல் ஒழுக்கமுள்ள பெண்கள் என்றே பொருள் படுகிறது. குலனுடையான் கண்ணேயுள என்ற வள்ளுவர் வாக்கும் குலம் ஜாதியல்ல ஒழுக்கமே என்பதை வற்புறுத்துகிறது. . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/21&oldid=646753" இலிருந்து மீள்விக்கப்பட்டது