பக்கம்:வானொலியிலே.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வானெலியிலே

மால்ை, சமூகம் என்னும் நிலத்தில் சாதி என்னும் விதை யூன்றி, வெறுப்பு நீர் பாய்ச்சி, வேற்றுமைச் செடி வளர்ந்து, பொருமை பூத்து, கலகம் காய்த்து, அடிதடி பழுக்கிறது என்றே கூறவேண்டும்.

ஜாதி வேற்றுமையானது நாட்டு வேற்றுமையைவிட, மத வேற்றுமையை விட, மொழி வேற்றுமையைவிட, கிற வேற்றுமையை விட மிகப் பெரிதாக மதிக்கப்பெற்று வருகிறது. ஐரோப்பியர், அமெரிக்கர், சைனுக்காரர், ஜப்பா னியர் ஆகியவர்கள் வேற்று காட்டாராயிருந்தும், வேற்று மொழியினராயிருந்தும், வேற்று நிறத்தினராயிருந்தும் அன் போடு கைலாகு கொடுத்து மகிழ்ச்சியோடு வரவேற்கிருேம். ஆல்ை, கமது காட்டினரை, கமது மதத்தினரை, கமது மொழியினரை, நமது நிறத்தினரை காம் தொடவும் அஞ்சி, மறுத்து, வெறுத்து வருகிருேம். இக் கொடுஞ் செயலேச் செய்கின்ற ஜாதி முறையை எண்ணும்பொழுது அறிஞர் களின் உள்ளம் வெடிக்காது என் செய்யும் ?

ஜாதி முறையில் திண்டாமை என்றும் ஒன்று உண்டு. இதைவிட கடுமையானதும், கொடுமையானதும் இவ்வுலகில் எப்பாகத்திலுமில்லே. தீண்டாமை என்ற சொல்லில் முதல் எழுத்து ' தி' முடிவெழுத்து ' மை '; ஆகவே அச் சொல்லிலேயே தீமை அமைந்திருக்கிறது. தீண்டாமை கெருப்பைவிடக் கொடியதாகும். கெருப்பு தொட்டவனே மட்டுமே சுடும். கெருப்பைத் தொட்டவனைத் தொட் டால் குடு தாக்காது. ஆனால், ஜாதி முறை வகுத்துள்ள திண்டலானது தொட்டவனைத் தொட்டாலும் தாக்கும். பிறகு அவனைத் தொட்டவனேத் தொட்டாலும் தாக்கும். மனிதனே மலத்தினுங் கேடானதாக மதிக்கச் செய்வது தீண்டாமையேயாம். மலத்தைத் தொட்டவன் கையைக் கழுவிவிட்டாற் போதும். மனிதனேத் தொட்டவன் தலையி லிருந்து கால்வரை கழுவி தலே முழுகித் திரவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/25&oldid=646762" இலிருந்து மீள்விக்கப்பட்டது