பக்கம்:வானொலியிலே.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாதி முறை 25

ஜாதி முறையில் வேண்டாமையும் ஒன்றுண்டு. அது, " சாய் நுழையும் வீட்டில்கூட நீ துழைய வேண்டாம், ான்ருய் கழுதை கடக்கும் தெருவில் கடக்க வேண்டாம் ” எனச் சொல்லும். ஜாதி முறையில் “ பாராமை " என்றும் ஒன்றுண்டு. அது, ' பூனே குடித்த எச்சில் பாலேக் குடி : ஆனல் மனிதன் பார்த்த பாலே மட்டும் குடிக்காதே ” எனச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கும். இன்னும் கொள்ளாமை, கொடுக்காமை, உண்ணுமை, தின்னமை, எண்ணுமை, இரங்காமை, பொருமை முதலிய எத்தனையோ ஆமைகள் ஜாதி முறைச் சேற்றில் வாழ்கின்றன. இந்த ஆமைகள் யாவும் உணராமை என்னும் கிணற்றிலுள்ள அறியாமை யின் குட்டிகள் போலும் ! -

தாழ்த்தப்பட்டவர்களுக்குள் நடைபெற்ற விருக் தொன்றில் நெய் பரிமாறினர்கள் என்ற குற்றத்திற்காக விருந்துண்ட உறவினர்களெல்லாம் ஜாதி இந்துக்களால் அடியும், மிதியும், உதையும் பட்டனர். இக் கொடுஞ் செயல் நடைபெற்ற நாள் 1986, ஏப்ரல் முதல் தேதி யாகும். தண்ணிர் எடுக்க மண் குடத்தைப் பயன்படுத் தாமல், பித்தளேக் குடத்தைப் பயன்படுத்திய குற்றத்திற் காகப் பெண் மக்கள் பலர் துன்புறுத்தப்பட்டனர். இக் கொடுஞ் செயல் டைபெற்றது. 1935, வேம்பர் முதலி லாகும். இரவிக்கை அணிந்த காரணத்திற்காக தாழ்த்தப் பட்ட பெண்களுக்கு ஜாதி முறை அடி வாங்கிக் கொடுத் திருக்கிறது.

சமீப காலத்தில் நமது ஜில்லாவில், குளித்தலே தாலுகாவில் ஒரு ஜாதியினரே வசிக்கும் ஒரு தெருவில், மற்ருெரு ஜாதியினர் வீடு வாங்கியது செல்லாது என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வாறு ஜாதி முறை செய்கின்ற கொடுமைகள் அளவிட்டுக் கூற முடியாதவையாகும.

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/26&oldid=646764" இலிருந்து மீள்விக்கப்பட்டது