பக்கம்:வானொலியிலே.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வானெலியிலே

ஒரு ஜாதியின்மீது ஆதிக்கம் செலுத்த இன்னொரு ஜாதிக்கு உரிமை உண்டு என்று கூறுகிறவர்கள், ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த மற்றெரு நாட்டுக்கும் உரிமையுண்டு ' என்று எண்ணி சும்மா இருந்துவிட வேண்டும். ஒரு நாட்டை அடிமைப்படுத்த இன்னொரு காட்டிற்கு உரிமையில்லே என்று கூறுகிறவர்கள், ஒரு ஜாதியை அடிமைப்படுத்த இன்னொரு ஜாதிக்கு உரிமை யில்லே' என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லவா ?

பொருளாதாரத் துறையிற் பார்த்தாலும் ஜாதி முறை தீமை செய்து வருகிறது. ஜாதியோடு தொழிலும் இணைக்கப் பெற்றிருக்கிறது. பிறப்பினலேயே ஒருவனது தொழில் முன்னதாகவே உறுதி செய்யப்பட்டு விடுகிறது. இதல்ை குறிப்பிட்ட சில ஜாதியினர் வேறு தொழில் செய்து பொருளாதாரத் துறையில் சிறப்படைந்து வாழ முடிவ தில்லை.

கல் வாழ்வு வாழ்வதற்குக்கூட ஜாதி முறை ைேம செய்து வருகிறது. எடுத்துக்காட்டாகப் பிராமணர்களேயே எடுத்துக் கொள்வோம். நால்வகைச் ஜாதியில் இவர்கள் தலே சிறந்தவர்கள். இந்த ஒரு ஜாதியில் அய்யர், அய்யங் கார், சர்மா, சாஸ்திரி என்பது போன்று வட காட்டிலும் தென்னுட்டிலும் சேர்ந்து பெரும் பிரிவுகள் 56-ம், உட் பிரிவுகள் 334-ம், உட் பிரிவுகளின் உட் பிரிவுகள் 896-ம் இருக்கின்றன என்பதை அறியும்பொழுது "வாழ்வு." எவ்வளவு தூரம் ஒதுக்கப் பெற்றிருக்கிறது என்பதை நன்கறியலாம். ஜாதி முறையும், கோத்திரப் பிரிவும் பார்த்து மணம் செய்வது என்ற கொள்கையினுல் அழகான ஆணும் பெண்ணும், அல்லது அறிவாளிகளான ஆணும் பெண்ணும் சேர்ந்து கல்வாழ்வு கடத்த முடிவதில்லே. ஆனது ஒன்றையும், ஆகாதது ஒன்றையும் இணைத்து அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/27&oldid=646767" இலிருந்து மீள்விக்கப்பட்டது