பக்கம்:வானொலியிலே.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Éå வானெலியிலே

இராமலிங்க சுவாமிகளும் ஜாதி ஒழிய வேண்டும் என்று வற்புறுத்திக் கூறியிருக்கின்றனர். அவ்வளவோடு கின்று விடவில்லை. எல்லா ஜாதியினரும் நாயன்மார்களாகியிருக் கிருர்கள் என்று சைவ புராணம் கூறுகிறது. அதைப் போலவே எல்லா ஜாதியினரும் ஆழ்வார்களாகியிருக் கிருர்கள் என்று வைணவ புராணமும் கூறுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக தீண்டாமை அழியவும், ஜாதி முறை ஒழியவும் தெய்வ சம்மதமும் இருக்கிறது என்று புராண வரலாறுகளால் தெரிய வருகிறது. திண்டாத ஜாதி, திருப்பாளுழ்வாரை, திருவரங்கப் பெரு மானும் , திருநாளைப் போவார் கந்தனுரை, தில்லை கடராஜப் பெருமானும் திருமேனியோடு தழுவி தன்னுள் இரண்டறக் கலக்கும்படிச் செய்த அருட் செயல்தான் அது. இனி என்ன விவாதம் இருக்கிறது ? ஒன்றுமில்லே.

ஜாதி முறையை ஒழிக்க 5 வழிகளிருக்கின்றன. முதலாவது ஜாதி முறையை வெறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவது பெயருக்குப் பின்னல் உள்ள பட்டப் பெயர்களே விடவேண்டும். மூன்ருவது எல்லோ ரிடமும் அன்பாய் பழகவேண்டும். நான்காவது சுத்தமாக இருக்கும் எவரோடும், எவ்விடத்தும் மகிழ்ச்சியோடு உண்ணவேண்டும். ஐந்தாவது கலப்பு மணம் செய்ய வேண்டும். இந்த 5 வழிகளாலும் ஜாதி முறையை ஒழிக்க இப்போது சிறிய அளவில் முயற்சிக்கப்பெற்று ஒருவாறு பலனும் அடைந்து வருகிறது. கலப்பு மணத்தை ஆக ரித்தும், கடத்தியும், கடத்தத் தாண்டியும், எழுதியும், பேசியும் வருகிறவர்களின் தொகை அதிகமாகி வருகிறது. ஜாதிக் கலப்பு மட்டுமல்ல, சமயக் கலப்பு, மொழிக் கலப்பு, மாகாணக் கலப்பு, தேசக் கலப்பு, கிறக் கலப்புத் திருமணங் கள்கூட நடைபெறத் தொடங்கிவிட்டன. பள்ளிகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/29&oldid=646771" இலிருந்து மீள்விக்கப்பட்டது