பக்கம்:வானொலியிலே.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 വിത്രികേ

மன்னன் நீர் நாடன் என்றும், புனல் நாடன் என்றும், பொன்னி நாடன் என்றும் அழைக்கப் பெற்றிருக்கிருன்.

'o * 峰 * இவற்றை, புறநானூறு முதலிய நூல்களால் கன்கறியலாம். புனல் காடன் என்ற பெயரானது ஒரு சிறந்த மன்னனேயும், அவனது செழித்த காட்டையும், விரிந்த கதியையும் தன்னுள் அடக்கிக் காட்டுவதை அறிந்து மகிழ வேண்டும். இது தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒரு தனிச் சிறப்பாகும்.

காவிரியின் தோற்றம் மேற்குத் தொடர்ச்சி மலையில். காவிரியின் மறைவு கிழக்குக் கடற்கரையில். காவிரியின் நீளம் ஏறக்குறைய 400 மைல்கள். காவிரியின் நாடுகள் : பிறந்தது குடகு காட்டில், தவழ்ந்தது கன்னடத்தில், கடந்தது கொங்கு நாட்டில், வாழ்ந்தது சோழ நாட்டில், குளிப்பது சோனட்டுக் கடலில் ஆகும். காவிரிக்கு கிலம் கூறவேண்டுமானல் அது குறிஞ்சி நிலத்திற் பிறந்து முல்லே நிலத்தில் தவழ்ந்து பால நிலத்தைப் பாராமல் மருக கிலத்தில் விளையாடி நெய்தல் கிலத்தில் முடிகிறது எனக் கூறலாம். காவிரி தோன்றும் இடத்திலிருந்து கடலோடு கலக்கும் இடம் வரை அது தெய்வக் காவிரியாகவே அன்றும் இன்றும் கருதப்பட்டு வருகிறது. இது அதன் வளம் பொருந்திய சிறப்பையே நமக்கு எடுத்துக் காட்டுவதாகும். ஆடி 18-ல் காவிரியில் நீர் பெருகுவதும் புது வாழ்வில் புகுந்த மணமக்கள் புதுப்புனல் ஆடுதலும் தங்கள் வாழ்வும் வாழ்நாளும் பெருக வேண்டும் எனக் காவிரியைத் தெய்வ மாக எண்ணி வணங்குதலுமாகியவைகள் தமிழ் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் வழக்கமாகும். -

காவிரியாற்று நீர் சோழ மன்னர்களே வாழ்விக்கவும் காவிரியாற்று மணல் சோழ மன்னர்களே வாழ்த்தவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/33&oldid=646780" இலிருந்து மீள்விக்கப்பட்டது