பக்கம்:வானொலியிலே.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வானெலியிலே

காவிரிக்குக் கரை கட்டுவதற்கென்று சிங்களத் தீவிலிருந்து பத்தாயிரம் தொழிலாளர்கள் இவனுல் வரவழைக்கப்பட் டனர். காவிரியின் இருபுறமுள்ள கிராமங்களைப் பல பிரிவு களாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவும் 5 மைல் நீளம் கரை கட்டத் திட்டமிட்டு ஆங்காங்கு வேலே செய்யும் ஆட்களுக்கு அக்தங்த கிராமத்தின் மூலம் அரசாங்க உணவளித்து 300 மைல் நீளத்திற்கு ஒரே காலத்தில் க ைகட்டச் செய்த திறமை வியக்கக் கூடியதாகும். காவிரியின் நீர் விணுகா மலும் வெள்ளத்தால் கிலங்கள் பாழாகாமலும் ர்ேப்பrசன வசதியோடு அணைகட்டிப் புகழ் பெற்ற மன்னன் இராஜ ராஜ சோழன் ஆவன். இவன் கி. பி. 985 முதல் 1013 வரை அரசாண்ட அறிஞன். இவளுல் கட்டப்பெற்ற தஞ்சாவூர்ப் பெரிய கோவில் 950 ஆண்டுகளாகியும் கிலேத்து கின்று புத்தம் புதிதாகத் தோன்றி அம் மன்னனுடைய புகழுடம் பிற்கு உலக மக்களிடையே இன்னும் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இக்கோவில் கட்டுவதற்குப் பெருங் கற்களேத் தோணிகள் மூலம் கொண்டு வர மது காவிரி பேருதவி செய்திருக்கிறது. -

சிலப்பதிகாரம் என்ற தமிழ்ப் பெருங்காப்பியம் தமிழ் மக்களின் செல்வக் கருவூலமாகும். இந்நூல் தோன்றி இன்றைக்கு 1800 ஆண்டுகள் ஆயின. இந்நூலே இயற்றி யவர் சேர காட்டு இளவரசர். துறவு பூண்டவராதலின் இளங்கோ அடிகள் எனப் பெயர் பெற்ருர். இவர் இந்நூலில் காவிரியைக் குறிப்பிடும்பொழுது காவிரிப்பேர் யாறு என்றும், சோழர் தம் தெய்வக்காவிரி என்றும் கூறியிருக் கிருர், கல்வியிற் பெரியராகிய கம்பர் தாம் இயற்றியுள்ள இராமாயணத்தில் காவிரியைக் கங்கையிற் புனிதமாய காவிரி எனக் கூறியிருப்பது வியப்பைத் தருகிறது. வான் பொய்ப்பினும் தான் பொய்யாது என்பது காவிரியின் சிறப்பைக் காட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/35&oldid=646782" இலிருந்து மீள்விக்கப்பட்டது