பக்கம்:வானொலியிலே.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரியும் உறையூரும் 35

இத்தகைய சிறப்புகளைப் பெற்று, தெளிந்து, பரந்து, விரிந்து, மீண்டு, ஓடுகின்ற காவிரியாற்றின் தென்கரையில் தான் பெரும் பெயரும், பெரும் பேறும், பெரும் புகழும் பெற்ற உறையூர் ககரம் அமைந்திருக்கிறது.

உறையூர் என்பது மக்கள் உறையும் ஊர் என்றும், உறைவதற்கு ஏற்ற ஊர் என்றும் பொருள்பெறும். ஊர் ' என்பது பொருள் அமைதியுடைய தமிழ்ச் சொல். மக்கள் கூட்டங்கூட்டமாக ஊர்ந்து சென்று தங்கியவிடங்களுக்கு அக்காலத்து மக்கள் வழங்கிய பெயரே ஊர் என்பதாகும். உறையூர்க்கு உறங்தை எனவும் பெயர் உண்டு. கோழி ககர் எனவும் கூறப்பெறும். உறையூர் தோன்றிய வரலாறு வீரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஒரு கோழியானது தன்னையணுகிய யானேயோடு போர் செய்து சிறகை விரித்துப் பறந்து, கொத்தி, விரட்டி வென்றதை யறிந்த சோழ மன்னன் அந்தவிடத்தையே தன் இருப்பிட மாகக் கொண்டான் என்பது கோழி நகர் வரலாறு. இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் உறையூறைப்பற்றிக் கூறும்பொழுது முறஞ்செவி வாரணம் முன் சமமுருக்கிய புறஞ் சிறை வாரணம் எனக் கூறியிருப்பதும் இவ் வரலாற்றை மெய்ப்பிக்கிறது. காரிக் கண்ணளுர் என்ற பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் உறையூரை அறந்தங்கும் உறையூர் எனப் புகழ்தங்கக் கூறியிருக்கிருர், காவிரியை அடுத்து உறையூரும், உறையூரை அடுத்து காவிரியும் அமைந்ததினுல், இரண்டும் புகழ் பெற்று விளங்கின எனக் கூறலாம். - - -

உறையூர் சோழ மன்னர்களுக்கு நெடுங்காலம் தல் நகராக இருந்திருக்கிறது. சில காலங்களில் தஞ்சை

திருவாரூர், கங்கைகொண்ட சோழபுரம், காஞ்சீவரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/36&oldid=646785" இலிருந்து மீள்விக்கப்பட்டது