பக்கம்:வானொலியிலே.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வியாபாரம்

அன்டர்களே,

வியாபாரம் என்ற தலைப்பில் இன்றைய தினம் உங்கள் முன்பு பேசுகிறேன். யார் வியாபாரி ? எது வியாபாரம் ? எது வியாபார முறை ? வியாபாரிகளால் ஏற்படும் நன்மை தீமைகள் எவை? அரசாங்கத்தின் கடமை எது என்ப வைகளே விளக்குவதே இன்றைய எனது பேச்சு.

யார் வியாபாரி !

வியாபாரம் செய்பவன் வியாபாரி. வியாபாரி என்ருல் திறமையுடையவன் என்றும் கூறலாம். மற்ற துறைகளில் உழைப்பவர்களைவிட வியாபாரிக்கு அதிக திறமை இருக்க வேண்டும். ஒரு வியாபாரிக்கு கைத்தொழில் அறிவும், வேளாண்மை அறிவும், பொருளாதார அறிவும், நிர்வாக அறிவும், அனுபவ அறிவும், அரசியல் அறிவும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ருல் தான் ஒருவன் சிறந்த வியாபாரி ஆக முடியும். இன்றேல், அவன் வியாபாரியாக இருந்தாலும், உண்மையான வியா பாரியாக இருக்க முடியாது.

இனி, அப்படிப்பட்ட ஒரு வியாபாரி பொது ஜனங்க ளால் போற்றப்பட வேண்டுமானல் மேற்கூறிய அறிவுகள் மட்டும் போதாது. இன்னும் ஒன்று வேண்டும். அதுதான் நாணயம் ' என்பது, நாணயம் என்ற சொல்லே பெரும் பாலும் பணம் ' என்பதற்கே வழங்கி வருகிருர்கள். பணம் என்பதும் காணயம்தான். ஆலுைம் இந்த நாணயம் பணம் அல்ல நா-ஈயம் காக்கு நயம்தான் காணயமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/50&oldid=646816" இலிருந்து மீள்விக்கப்பட்டது