பக்கம்:வானொலியிலே.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வானெலியிலே

பொய் பேசாமை, கெடு தவருமை, கடுஞ் சொல் சொல் லாமை ஆகிய இம் மூன்றும் கா கயங்களாம். இதிலிருந்து ஒரு வியாபாரியின் நா நயமானது உண்மை பேசுவது, கெடுப்படி கடந்துகொள்ளுவது, இனியவை பேசுவது ஆகிய மூன்றுமே என நன்கு விளங்கும். -

வியாபாரிகளுக்கு அரசாங்கத்தில் அதிக செல்வாக்கு உண்டு. வியாபாரிகள் உழைத்து சம்பாதித்து தொழில் வரி, லேசென்ஸ் வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி, ஏற்றுமதி வரி, சுங்க வரி, சொத்து வரி, வருமான வரி, அதிக வரி, அமித லாப வரி ஆகிய பல்வேறு வரிகளே அரசாங்கத்திற்குச் செலுத்துகின்றனர். இதனால் அரசாங்கத்தின் ஒரு பிரிவுச் செலவையே ஈடு செய்வதாகிறது.

மற்றவர்களேவிட அதிகமாக சிந்தனை செய்பவர்கள் விஞ்ஞானிகள் ; அவர்களேவிட அதிகமாக சிந்தனே செய்ப வர்கள் வியாபாரிகள். விழிப்பு கிலேயில் மட்டுமல்ல ; உறக்க நிலையிலும்கூட வியாபாரிகள் சிக்தனை செய்வதுண்டு. ஒரு விஞ்ஞானியின் தொண்டுகளைப்போலவே ஒரு வியாபாரியின் தொண்டுகளும் காட்டிற்குத் தேவைப்படுகின்றன.

மற்றவர்களைக் காட்டிலும் வியாபாரிகளுக்கு அதிக மாக நாட்டின்மீது பற்றுதல் உண்டு. எனது பொருள், எனது வியாபாரம், எனது சொத்து என்பதிலிருந்தே எனது நாடு என்ற உணர்ச்சியும் வன்மையாக வளர்ச்சியடைகிறது. இதனால், பிறரைக் காட்டிலும் வியாபாரிகளே அதிகமாக நாட்டுப்பற்று உடையவர்கள் எனக் கூறலாம்.

உலகத்தின் பல்வேறு காடுகளில் உள்ள இன்றைய அரசியல் சபைகள் வியாபாரிகளே அதிகம் கொண்டவைக ளாக இருந்து வருகின்றன. சில அரசாங்கங்கள் வியாபாரி களின் துணைகொண்டு நடைபெறுகின்றன. இன்னும் சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/51&oldid=646818" இலிருந்து மீள்விக்கப்பட்டது