பக்கம்:வானொலியிலே.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியாபாரம் 5.l

அரசாங்கங்கள் வியாபாரிகளாலேயே நடத்தப்படுகின்றன. உலகப் பெரும் போர்களிற் பல வியாபாரத்தை அடிப்படை யாகக் கொண்டவைகளாக இருந்திருக்கின்றன. இதனால் உலகிற் சிறந்தவன் வியாபாரி என நன்கு விளங்கும்.

எது வியாபாாம் ?

என்பதை ஒருவாறு ஆராய்வோம். கொண்டு, விற்ப தற்குத்தான் வியாபாரம் என்று பெயர். இருக்குமிடத்தில் வாங்கி இல்லாதவிடத்தில் விற்பதும், விளேக்தவிடத்தில் வாங்கி, விளையாத விடத்தில் விற்பதுமே வியாபாரம்.

தஞ்சை ஜில்லாவில் அதிகமாக விளைந்த கெற்களே வாங்கி கோயமுத்துார் ஜில்லாவில் விற்பதும், கோயமுத்துார் ஜில்லாவில் உற்பத்தியான துணிகளை வாங்கி தஞ்சை ஜில்லாவில் விற்பதும் ஒரு நல்ல வியாபாரம்தான். இந்த வியாபாரம் பொது ஜனங்களால் பாராட்டப்பெற்று சிறப் புடையதாகக் கருத வேண்டுமானல், இதில் நேர்மை என்ற ஒன்று சிறப்பாகக் கலந்திருக்க வேண்டும். நேர்மை கலவாத வியாபாரத்தை வியாபாரம் எனக் கூறுவதைவிட

சூது ' எனக் கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

முகந்து கொடுப்பதிலும் வாங்குவதிலும், அளந்து கொடுப்பதிலும் வாங்குவதிலும, கிறுத்துக் கொடுப்பதிலும் வாங்குவதிலும், எண்ணிக் கொடுப்பதிலும் வாங்குவதிலும் நேர்மையாக கடந்து கொள்ளவேண்டும். உயர்ந்த சரக்கு களில் மட்டச் சரக்குகளைக் கலப்பது நல்லதல்ல. வியாபாரத்தில் நேர்மையைக் கலப்பதுதான் நல்லது. கம்பும்படி சொல்லிவிடுவது நல்லதல்ல. அது திறமையும் ஆகாது. உண்மையைச் சொல்வதுதான் நல்லதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/52&oldid=646820" இலிருந்து மீள்விக்கப்பட்டது