பக்கம்:வானொலியிலே.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வானெலியிலே

வியாபாரம் என்ருல் என்ன ? என்பதைப்பற்றி இரண். டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே ஒரு தமிழ்ப் பெரும் புலவர் மிக அழகாகக் கூறியிருக்கிருர். அது, கொள்வதுவும் மிகை படாது கொடுப்பதுவும் குறைபடாது' என்பதே. இக்காலத்திற் கேற்றவாறு கலப்படங்கள் நடைபெருது என்பதையும் நாம் சேர்த்துக் கூறிக் கொள்ளலாம். அக்காலத்து கலப்படஞ் செய்வது இல்லே யாதலின் புலவர் கூருது விடுத்தனர் எனக் கொள்ளுதல் வேண்டும்.

  • . எது வியாபார முறை:

1. ஒரு பொருளே கிறுத்துக் கொடுக்கும்போது தராசுகளின் முனே சிறிது முனேக்கும்படி நிறுத்துக் கொடுப்பது ஒரு வியாபார முறை. தராசின் முனே முன்னுக்கு வருவதால் கிறுக்கும் தொழிலாளி, எழுதும் கணக்காளி, கடத்தும் முதலாளி ஆகிய மூவரும் முன்னுக்கு வருவதுடன் வாங்குபவனும் முன்னுக்கு வருவான். வியாபாரமும் முன்னுக்கு வரும். நாடும் முன்னுக்கு வரும். தராசின் முனே பின்னுக்குப் போய்விடுமானல் யாவும் அடியோடு பின்னுக்குப் போய்விடும் என்பதை யாவரும் அறிந்திருக்க வேண்டும். -

3. ஒரு நல்ல வியாபாரத்திற்கு அதிக மூலதனம் வேண்டும். மூலதனம் இல்லாமல் வியாபாரம் செய்வது கை இல்லாமல் முழம் போட ஆசைப்படுவது போலாம். கடன் வாங்கி தொழில் செய்பவன் முதலாளி அல்ல : அவன் கடளிை. வேண்டுமானல், கடன்கார முதலாளி எனக் கூறிக் கொள்ளலாம். கடனுக்குப் பயப்பட்டு, வட்டி செலுத்தவும், செலவு செய்யவும், விளம்பரஞ் செய்யவும் பயப்படுகிற காரணத்தினல், கடன்கார முதலாளிகளால் ஒரு நல்ல வியாபாரத்தைச் செய்ய முடிவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/53&oldid=646822" இலிருந்து மீள்விக்கப்பட்டது