பக்கம்:வானொலியிலே.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வானெலியிலே

சரக்குகளைப் பறிமுதல் செய்யவோ, 5 வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்கவோ இம் மூன்றையும் சேர்த்து ஒரே சமயத்தில் விதிக்கவோ இந்த அவசரச் சட்டம் அனுமதி யளிக்கிறது.

கடையின் உள்ளிருக்கும் சரக்குகளைக் கடையின் முன் எழுதி வைக்காதிருப்பதும், கட்டுப்பாட்டு விலைக்கு விற்க மறுப்பதும், கட்டுப்பாட்டு விலைக்குமேல் விற்பதும், விற்ற விலைக்கு பட்டியல் கொடுக்க மறுப்பதும், சரக்குகளே அபரிமிதமாகச் சேகரித்து வைப்பதும், கொள்ளே இலாபம் அடிப்பதும் ஆகியவைகள் இச்சட்டப்புடி பெருங் குற்றங் களாகும்.

இக் குற்றங்களுக்காக 500, 1000, 2000, 5000, 10,000 ரூபாய்கள் அபராதமும் 1 வாரம் 1 மாதம் 3 மாதம் 6 மாதம் சிறைத் தண்டனேகளும் அளிக்கப்பெற்று வரு கின்றன. இவற்றை நீங்கள் தினந்தோறும் தினசரிப் பத்திரிகைகள் மூலம் பார்த்தும், வானொலி மூலம் கேட்டும் வந்திருக்கலாம். கடந்த அக்டோபர் மாதம் 13-ந் தேதி யன்று கராச்சியில் ஒரு வியாபாரிக்கு 15,000 ரூபாய்கள் அபராதமும் 6 மாதக் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப் பெற்றது. சில நீதி மன்றங்களில் ஒரு பைசா அதிகம் விற்ற குற்றத்திற்காக ரூ. 500 அபராதம் விதிக்கப் பெற்றிருக்கிறது. இங்கு மட்டுமல்ல ; இது போன்ற சட்டங்கள் உலக முழுதுமுள்ள எல்லா நாடுகளிலும் அமுலிலிருப்பதாகத் தெரிய வருகிறது.

இத்தகைய குற்றங்களேச் செய்ததற்காக அமெரிக் காவில் சில வியாபாரிகள் ஆயுள்வரை சிறைத் தண்டனே

அடைந்திருக்கின்றனர். வேறு பல நாடுகளில் வியாபாரிகள்

தங்கள் சொத்துக்களே இக் குற்றங்களுக்காக இழந்திருப் பதாகவும் தெரியவருகிறது. இவைகளைப் பார்க்கும்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/59&oldid=646836" இலிருந்து மீள்விக்கப்பட்டது