பக்கம்:வானொலியிலே.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - வானெலியிலே

இதோடு இப்பொங்கல் விழாவில் முதல் காள் விழா முடிவு பெறுகிறது. அடுத்த நாள்.

கெல்லும் கரும்பும் விளைந்து விட்டிற்கு வந்தது மக்கள் உழைப்பினுல் மட்டுமா ? அல்ல ; மாடும் இவ்விளைவிற்கு சரி பங்கு உழைத்திருக்கிறது. ஆகவே மக்கள் பொங்கல் விழாவைப்போலவே, மாட்டுப் பொங்கல் விழாவும் மறுகாள் கொண்டாடப்படும். மாட்டுக் கொட்டில்களைத் தூய்மைப் படுத்தி, மாடுகளேக் குளிப்பாட்டி, அவற்றிற்கும் வண்ணம் பூசி, பூவும், பொட்டும் இட்டு, அன்றும் புதுப் பொங்கல் பொங்கி, ஆடவரும், பெண்டிரும் இரு கைகளாலும் இனிப்புச் சோற்றை அள்ளி, அள்ளி அவைகளுக்கு ஊட்டி மகிழ்வர். மக்களைப்போலவே மாடுகளும் தங்கள் உழைப்பின் பலனே உண்டு மகிழும்படிச் செய்வதுதான் மாட்டுப் பொங்கல் விழாவின் கருத்தாகும். இத்துடன் பொங்கல் விழா முற்றுப் பெறுவதில்லை.

கெல்லும் கரும்பும் விளைந்து வந்தது தன் உழைப்பில்ை தான் என்று மனிதன் கினைப்பாளும். தன் உழைப்பினுல் தான் விளைந்தது என்று மாடும் எண்ணுமாம். மனிதனேவிட தனக்கு அதிக வலிமை உண்டென்று மாடு கினைக்குமாம். மாட்டைவிட தனக்கு அதிக வலிமை உண்டென்று மனிதன் கினைப்பாளும். இதில் எது சரி ? எப்படி முடிவு கட்டுவது ? இதன் முடிவை கண்டுபிடித்துக் கூறுவதற்காகத்தான் மூன்ரும் காள் சல்லிகட்டும் விழா நடைபெறுகிறது.

திறந்த வெளிகளிலே காளைகளே அவிழ்த்துவிடுவார்கள். அக்காளைகளே இளைஞர்கள் விரட்டிப் பிடிப்பார்கள். பிடிபட்ட காளைகளின் கொம்புகளில் கட்டப்பெற்றுள்ள பொருள்களைப் பிடித்த இளைஞர்கள் பரிசாகப் பெறு வார்கள். இக்காட்சிகளைப் பெண்டிரும் பிள்ளைகளும் பெரி யோரும் கண்டு களிப்பார்கள். காளைகளே அடக்கும் காளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/65&oldid=646850" இலிருந்து மீள்விக்கப்பட்டது